Saturday, May 10, 2014

இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம்.



உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம்.  அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக  வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.

நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை  தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.  தினசரி இரவு  அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள  இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம்  விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால்  இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால்  இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

மன அழுத்தம் போக்க உடற்பயிற்சி

மன அழுத்தம் போக்க உடற்பயிற்சி
இன்றைய கணினி உலகில் உடற்பயிற்சி செய்ய எங்கு நேரம் இருக்கிறது ஆனால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதோ உடல்வலி மற்றும் மனஅழுத்தம் போக்கும் ஒரு சிறிய உடற்பயிற்சி.
இரண்டு கால்களுக்கு இடையில் சிறிது இடைவெளி விட்டு, பார்வையை நேராக வைத்துக்கொண்டு நிமிர்ந்து நிற்கவும். தரையில் உள்ள ஒரு இரும்புப் பட்டையைத் தூக்குவதுபோல கற்பனை செய்துகொள்ளவும். இப்போது அதைச் செய்வதற்கு முன்பாக, மூச்சை நன்றாக இழுத்துக்கொண்டு, மெதுவாக முன்புறமாக வளைந்து இரு உள்ளங்கைகளும் தரையில் படுமாறு செய்யவும்.
இப்போது, மெதுவாக மூச்சை வெளியிட்டவாறு, வாயைத் திறந்து “ஆ................................ஹா”! என்று சத்தமாகச் சொல்லவும். உங்களால் முடிந்தவரை சத்தமாகச் சொல்லவும். இந்தப் பயிற்சியானது உங்களின் முக இறுக்கத்தைக் குறைத்து, முகத்தசைகளுக்கு ஓய்வு அளிக்கின்றது.
பழைய நிலைக்கு மீண்டும் திரும்பிய பிறகு, நேராகவும் நிமிர்ந்தும் நின்றுகொண்டு, முதுகை லேசாக பின்புறம் வளைத்து, கைகளை தலைக்கு மேலே தூக்கி, கண்களை மேல்நோக்கிப் பார்த்து, மார்பை நன்றாக விரித்து, விரல்களைத் திறக்கவும்.
இதுவே ஒரு முழுப்பயிற்சி. சிறந்த பய‌னை‌ப் பெறுவதற்கு ஒரு நாளைக்கு 10 முறை இவ்வாறு செய்யவும்.
நன்மைகள்:
உடலில் உள்ள அனைத்து வலிகளும் பறந்துபோகும். இது மேலும் கால்கள், முதுகு, தோ‌‌ள்பட்டை மற்றும் கைகளில் உள்ள விறைப்புத் தன்மை மற்றும் வலியைப் போக்குகிறது. உடலின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தி, முதுகெலும்பு மிருதுவாகவும் வலிமையாகவும் இருக்கச் செய்கிறது.